என்ன சமையலோ....

சமையல் ஒரு அருமையான விஷயம். அதை மிக அழகாக, நேர்த்தியாக செய்தால் அதற்கு மதிப்பே ஜாஸ்தி! நான் விவரம் தெரிஞ்சு, அப்படி taste-ஆ, அழகா சமைக்கிறது எங்க அம்மா, அப்புறம் எங்க ஆச்சி(அம்மாவோட அம்மா). ஆச்சி பேர் பத்மாவதி. சாதாரனமா ஒரு ரசம் வச்சாக்கூட super-ஆ இருக்கும்.

எனக்கு பிடிச்ச, ஆச்சி பண்ற சமையல் இதோ:
1) பிரியானி (வெஜ் & நான்-வெஜ்)
2) கல் தோசை + கருப்பட்டி பாகு
3) பால் சாதம் + ஆச்சி செஞ்ச கூழ் வடகம்+ தேங்காய்-வத்தல் தொகையல்
4) மீன் புட்டு
5) இனிப்பு ஆப்பம்(கருப்பட்டி போட்டது)
6) காய்கறி ஊருகாய்
7) கோழி வறுவல்
8) mutton gravy
9) ரவா கேசரி ...

10) அவல் உப்புமா ...The list is endless...

இதோ ஆச்சியின் mutton gravy ரெசிபி(goes well with steamed rice/chapathi):
(vegetarians pls. excuse)

Mutton Gravy (serves 4 )
Ingredients
1) mutton 1/2 kg
2) onion 1 cup peeled and sliced (preferably sambhar vengayam)
3) refined oil - 2 table spoons
4) salt to taste
5) Chilli powder 1 spoonful
6) turmeric powder- 1/4 tablespoon

To grind:
1) 1/4 coconut
2) 1 teaspoon jeera (black)
3) 4-5 numbers cashewnuts

Method:
1) wash and cut mutton into 1/2 inch pieces.
2) Put the pressure cooker on the stove and add the refined oil.
3) add onions and saute till it becomes transparent.
4) add the mutton pieces and stir till all the water from the mutton is dried (takes 2-3 minutes generally).
5) add turmeric, chilli powder,salt and keep stirring till the mutton is coated with the masala and oil .
6) add the paste, mix well for another 1 minute.
7) Add 2 glasses of water (approx 500ml).
6) close the pressure cooker.
7) cook for 4 whistles on high flame, then simmer for 3 minutes and then switch off.
8) Once all the pressure is released, open the cooker and transfer to serving bowl. (In case you find the gravy a litle watery, put it back in the cooker (without the lid) and simmer for 5 minutes.


அவல் உப்புமா


Ingredients:
1) aval(poha) -1 cup
2) onion -1/2 cup peeled and sliced
3) refined oil - 1 table spoon
4) salt to taste
5) 1 spoon lemon extract
6) turmeric powder- 1/4 tablespoon
7) 3 green chillies, sliced
8) curry leaves - few
9) coriander finely chopped 2 spoonfuls
10) saunf (green jeera) - 1/4 spoon
11)mustard(kadugu) - 1/4 spoon

Method:
1) soak the aval in water for 2 minutes. then squeeze the water out and spread out aval on a plate
2) Put the kadai/pan on the stove and add the refined oil
3) add saunf,mustard,,onions,chilli and curry leaves and saute for 2 minutes
4) add the aval, reduce the flame to a simmer before and adding the aval else it would stick to the walls of the pan, cook from now on in a slow flame.
5) add turmeric, salt and stir for another 1 minute
6) add the lemon extract and the coriander and switch off the stove
7) transfer to a serving dish and serve. This is very easy to make but tasty snack/tiffin.

Happy cooking !!Bye for now!!
Now listening to -
uruguthay from veyil(music by GV.Prakash)
Current Book - English -The fourth estate by Jeffery Archer ,Tamil - Janani by La.Sa.Ra(mamirtham)

தேவதை


என்னமோ தெரியலை.. இந்த வார்த்தையும் கற்பனையும் எனக்கு ரொம்ப புடிக்கும், சின்ன வயசில இருந்தே.. (அப்படின்னா இப்போ ரொம்ப வயசாயிருச்சுன்னு அர்த்தம் இல்லை, அப்புறம் அம்பியும், கைப்பிள்ளையும் இது தான் சாக்குன்னு , அக்கான்னு கூப்பிடிருவாங்க.. )

நான் நிறைய புத்தகம் வாசிப்பேன். எனக்கு தெரிஞ்சு ஒரு 3 வயசில இருந்தே, வந்த பழக்கம் இது. அப்போவெல்லாம் schoolல ஒரு புக் எடுத்தா, 1 வாரம் நம்ம அதை வச்சு படிச்சிட்டு திரும்ப கொடுக்கனும். (பத்திரமா!) அதனால தான் இந்த பழக்கம் வந்ததுன்னு கூட சொல்லலாம்.

அப்படி நான் தேடித் தேடி படிச்ச புத்தகங்கள் பெரும்பாலும் தேவதைகள் பற்றிதான் இருக்கும். அதிலும் ஆங்கிலத்தில் தான் அவை நிறைய இருக்கும். கிறிஸ்துவ மதத்தில் நிறைய தேவதைகள் பற்றிய reference உண்டு. Mostly the authors who wrote books for kids were Christians, and may be thats why I could find so many kids books based on angels in English, when compared to tamil.

இந்த தேவதைகள் எப்போதும் ஏழைகளுக்கும், பெற்றோர் அற்ற குழந்தைகளுக்கும் நல்லது செய்ய கடவுளால் ( எந்த மதமாயிருந்தால் என்ன, கடவுள் ஒன்று தானே) அனுப்பி வைக்கப்படுவர். இவர்களுக்கு fairy-godmother, supporter, என்றெல்லாம் வேறு குறியீடுகளும் உண்டு. எனக்கு சிறு வயதில் இவர்கள் கற்பனை என்றே ஒத்துக்கொள்ள முடியாது.

போதாக் குறைக்கு என் friends gangக்கும் இந்த நம்பிக்கை உண்டு. Example : ஒருத்தருக்கு பல் விழுந்தாலும், அந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல், அதை பத்திரமாக ஒரு மரத்துக்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு, திரும்ப பார்க்காமல் வந்துவிடுவோம்!( அன்றிரவு ஒரு பல்-தேவதை (tooth- fairy யோட தமிழாக்கம்) வந்து அதை எடுத்துக்கொண்டுபோய் கடவுள் கிட்ட கொடுக்கும் , அப்புறம் எதுனா surpriseஆ நல்லது அடுத்த நாள் நடக்கும்னு எல்லாம் ஒரு நம்பிக்கை..)

Best part என்னன்னா இந்த தேவதைகளும் குழந்தைகள் உருவில் இருப்பது தான். so அதனால் இன்னும் ரொம்பப் புடிக்கும். pencil box, school bag, hair clip, dress, shoes, story books, notebook labels எல்லாமே angels pictureதான் இருக்கும் எனக்கு!

அந்த நினைவுகளோட வளர்ந்த நான் இன்னும் தேவதைகளை நம்பறேன். நாம் ஒரு நல்லது செஞ்சா, நமக்கு பதிலுக்கு ஒரு நல்ல விஷயம் கடவுள் செய்வார் உடனே ( vice versa applies too)


அதனாலேயே நான் என் குழந்தையாகட்டும், அக்காவோட பிள்ளைகளாகட்டும், பிற குட்டீஸ்கள் எல்லாரையும் நான் தேவதைகளாகத் தான் பார்ப்பேன் இன்றும்.. கடவுள் நமக்காக அனுப்பிவைத்த தேவதைகள்.. (gender வித்தியாசம் இல்லாம, எல்லா வாண்டூஸும் angels தான்)

அந்த வார்தையில் கூட ஒரு magic இருக்குங்க! உங்க wife/girl friendஐ "நீ என் தேவதை" அப்படின்னு சொல்லிப் பாருங்க! நான் சொல்றது உண்மையா இல்லையானு அப்புறம் சொல்லுங்க. (அதுக்காக ரோட்டில போகும்போது எல்லாம் அவங்கள தேவதைன்னு கூப்பிடக் கூடாது, அதுக்குன்னு ஒரு நேரம் காலம்,இடம் இருக்குல்ல??)

இன்னும் உங்கள் தேவதையை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு good luck!

Not very new but nice to hear them again

சென்ற வாரமும், இந்த 4 நாட்களும் கடுமையான வேலை, இப்பொழுது கொஞ்சம் தனிந்திருக்கிறது. So here i am with my new post(s)..

இன்று சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு site-லிருந்து கேட்டேன்..நாம எப்பவுமே கொஞ்சம் latestஆ வந்த பாட்டதான் கேட்போம், ரொம்ப rareஆ, சில selected oldies or mid time songs கேட்போம்.. என்ன? நான் சொல்றது சரி தானே?

So here goes my list that I listened to and enjoyed today. If you like some song in this list, time to thank me for reminding you of it and then check that one & enjoy the nostalgia :)

1. சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச்சோலை சின்ராசு
2. அழகே - ராஜபார்வை
3. ஓ butterfly -மீரா
4. ஏ அய்யாச்சாமி - வருஷம் 16
5. சுந்தரி நீயும் - ம.ம.காமராஜன்
6. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்
7. நதியா நதியா - பூ மழை பொழிகிறது
8. சின்னக் குயில் - பூவே பூச்சூடவா
9. பட்டுக் கண்ணம் - காக்கிச்சட்டை
10. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
11. செவ்வானம் - பவித்ரா
12. கத்தாழங் காட்டுவழி - கிழக்குச் சீமையிலே

மனையாள் அன்பு!


மாலை மணி ஆறடித்ததும்,
வீட்டு வேலையெல்லாம் முடித்து,
முகம் கழுவி, சின்னதாக ஒரு அலங்காரம் செய்து,
கனவருக்கு பிடித்த அந்த சிகப்பு காட்டன் புடவை உடுத்தி,
ஞாபகமாக மதியமே வாங்கி, ஈரத் துணியில் முடிந்து வைத்த,
ஒரு முழம் மல்லியைத் தலையில் சூடி,
சீக்கிரமே இரவிற்கான உணவை சமைத்துவைத்து
பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு
ஆசையோடு காத்திருக்கும் அன்பு மனைவி....

சரியாக ஏழு மணிக்கு, அரபு தேசத்தில் ஐந்து ஆண்டுகளாய்
உழைக்கும் தன் கனவனின்
வாரம் ஒருமுறை வரும் தொலைபேசி அழைப்பிற்காக!

கல்யாண season!

அப்பப்பா.. எங்கு திரும்பினாலும் ஒரே கல்யாண invitation எங்க வீட்ல. college mates, school mates, collegues நிறைய பேருக்கு கல்யாணம் இப்போ தான் நடக்குது. போன 2 வாரத்துக்குள்ள 4 friendsக்கு கல்யாணம்.. அதிலயும் weekdayல - super! போகவும் முடியாது, போகனும்னு வேற தோனுது! என்ன செய்ய..
But to all my friends who got married recently -- HEARTY CONGRATULATIONS!

Welcome to the elite club of married people!!

A nice quote on marriage: It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.


So my friends, treat your spouse as your friend first, then your marriage would definitely be successful and mutually pleasing!