தேவதை
என்னமோ தெரியலை.. இந்த வார்த்தையும் கற்பனையும் எனக்கு ரொம்ப புடிக்கும், சின்ன வயசில இருந்தே.. (அப்படின்னா இப்போ ரொம்ப வயசாயிருச்சுன்னு அர்த்தம் இல்லை, அப்புறம் அம்பியும், கைப்பிள்ளையும் இது தான் சாக்குன்னு , அக்கான்னு கூப்பிடிருவாங்க.. )
நான் நிறைய புத்தகம் வாசிப்பேன். எனக்கு தெரிஞ்சு ஒரு 3 வயசில இருந்தே, வந்த பழக்கம் இது. அப்போவெல்லாம் schoolல ஒரு புக் எடுத்தா, 1 வாரம் நம்ம அதை வச்சு படிச்சிட்டு திரும்ப கொடுக்கனும். (பத்திரமா!) அதனால தான் இந்த பழக்கம் வந்ததுன்னு கூட சொல்லலாம்.
அப்படி நான் தேடித் தேடி படிச்ச புத்தகங்கள் பெரும்பாலும் தேவதைகள் பற்றிதான் இருக்கும். அதிலும் ஆங்கிலத்தில் தான் அவை நிறைய இருக்கும். கிறிஸ்துவ மதத்தில் நிறைய தேவதைகள் பற்றிய reference உண்டு. Mostly the authors who wrote books for kids were Christians, and may be thats why I could find so many kids books based on angels in English, when compared to tamil.
இந்த தேவதைகள் எப்போதும் ஏழைகளுக்கும், பெற்றோர் அற்ற குழந்தைகளுக்கும் நல்லது செய்ய கடவுளால் ( எந்த மதமாயிருந்தால் என்ன, கடவுள் ஒன்று தானே) அனுப்பி வைக்கப்படுவர். இவர்களுக்கு fairy-godmother, supporter, என்றெல்லாம் வேறு குறியீடுகளும் உண்டு. எனக்கு சிறு வயதில் இவர்கள் கற்பனை என்றே ஒத்துக்கொள்ள முடியாது.
போதாக் குறைக்கு என் friends gangக்கும் இந்த நம்பிக்கை உண்டு. Example : ஒருத்தருக்கு பல் விழுந்தாலும், அந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல், அதை பத்திரமாக ஒரு மரத்துக்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு, திரும்ப பார்க்காமல் வந்துவிடுவோம்!( அன்றிரவு ஒரு பல்-தேவதை (tooth- fairy யோட தமிழாக்கம்) வந்து அதை எடுத்துக்கொண்டுபோய் கடவுள் கிட்ட கொடுக்கும் , அப்புறம் எதுனா surpriseஆ நல்லது அடுத்த நாள் நடக்கும்னு எல்லாம் ஒரு நம்பிக்கை..)
Best part என்னன்னா இந்த தேவதைகளும் குழந்தைகள் உருவில் இருப்பது தான். so அதனால் இன்னும் ரொம்பப் புடிக்கும். pencil box, school bag, hair clip, dress, shoes, story books, notebook labels எல்லாமே angels pictureதான் இருக்கும் எனக்கு!
அந்த நினைவுகளோட வளர்ந்த நான் இன்னும் தேவதைகளை நம்பறேன். நாம் ஒரு நல்லது செஞ்சா, நமக்கு பதிலுக்கு ஒரு நல்ல விஷயம் கடவுள் செய்வார் உடனே ( vice versa applies too)
அதனாலேயே நான் என் குழந்தையாகட்டும், அக்காவோட பிள்ளைகளாகட்டும், பிற குட்டீஸ்கள் எல்லாரையும் நான் தேவதைகளாகத் தான் பார்ப்பேன் இன்றும்.. கடவுள் நமக்காக அனுப்பிவைத்த தேவதைகள்.. (gender வித்தியாசம் இல்லாம, எல்லா வாண்டூஸும் angels தான்)
அந்த வார்தையில் கூட ஒரு magic இருக்குங்க! உங்க wife/girl friendஐ "நீ என் தேவதை" அப்படின்னு சொல்லிப் பாருங்க! நான் சொல்றது உண்மையா இல்லையானு அப்புறம் சொல்லுங்க. (அதுக்காக ரோட்டில போகும்போது எல்லாம் அவங்கள தேவதைன்னு கூப்பிடக் கூடாது, அதுக்குன்னு ஒரு நேரம் காலம்,இடம் இருக்குல்ல??)
இன்னும் உங்கள் தேவதையை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு good luck!
Comments
தேவதை இளம் தேவின்னு பாட்டு கூட பாடலாமா? சரி நீங்க சொல்ற wife/girlfriend எல்லாம் இல்லாதவங்க யாரை தேவதைன்னு சொல்லலாம்?
உங்களுக்குதான் good luckனு சொன்னோம்ல!
சாரி! நான் அதை கவனிக்கலை. குட் லக்குக்கு டேங்ஸுங்க.
:)
கரெக்ட்டா சொன்னீங்க...இப்படி பொய் சொன்னாத்தான் நல்ல சாப்பாடு கிடைக்கும் :-)
தல வூட்டாண்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லவேண்டியது தான் :-)
People who do not have wife/gf, can call their mother an angel:-))
இன்னும் உங்கள் தேவதையை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு good luck!
//
ippidi neraya peru sollirkanga... hmm hmm... onnum nadakkale :(
ungalukkenna "good luck" sollitu "S" aayiruveenga !!!
anyways,unga vaai muhurtham eppidinu paapom :)
@Priya - hi! yup every mom is an angel too. should have mentioned that in the post! thanks anyway!
@Arun - All the best!
@Porkodi - Enaku Simbu & Nayanthara rendu perayumay pudikaathu.. so nan illa athu.
:) Deeksh
நல்ல பதிவு தீக்ஸ்
long time, eppadi irukeenga, veetula husband kutty ellam nalla irukaangala?
that is a very sweet post..
//ella vaandusum angels than//
How true
Thanks for dropping by! Guessing you.. thats a tough job :) no clues, but we met last in 1999 means you are either my school mate in Vikaasa/Jeevana,or my senior/junior there, or classmate in LDC.. PLease do let me know who you are... suspense is one thing I cant wait for!
So nice to see you at my blog again.. thanks. We all are fine dear. Hope to hear the same from you too.
Hello Annan
Vellai dress elam potu bharathi raja group dance mathiri elam vara matanga anni, simpleaa aana supera varuvanga seekrama!!
semmaya irundhadhu
//தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லிவைத்த பொய்கள்..//
Dear Divya - Thanks for coming.And abt the post, yup everythign about angels is interesting!!
vanakkam ஆழியூரான் - uunmai neenga soldrathu. nalla kavithai.thanks for the comments...
congrats on your baby girl! And thanks for sharing that feeling with us all.
- deeksh
;) என்னவ்ளை பார்க்கும் வறை! LOL
every person has a angel in them! athai thaan naam a thedanum
nice post!