இந்த நொடி ..
கண்ணை மூடி முழிப்பதற்குள் , காலம் மிக வேகமாக ஓடிவிடுகிறது. நாம் உணர்வதற்கு முன்னே, ஒரு நொடியில் ஒரு காதல் பூத்துவிடுகிறது, ஒரு மரணம் நிகழ்கிறது, பேசக் கூடாத ஒரு வார்த்தை உதிர்ந்துவிடுகிறது. காலம் தான் அதன் போக்கில் மனிதனை இழுத்துக்கொண்டு போகிறது. நல்லவன் தீயவனாகிறான், மனிதன் உருவாக்கியவை அழிகின்றன, புதிதாக பல விஷயங்கள் இவ்வுலகில் உதிக்கின்றன...
ஒவ்வொரு நாலும் கைக்கடிகாரம் அணியும் முன் காலம் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறது இந்த நொடியிலிருந்து எனக்கு - என்று அனைவரும் சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் மின்னஞ்சலில் வாசித்த கதை இது - ஒரு சிறுவன், தன் தந்தை தன்னுடன் நேரம் கழிக்க ஆசைப்பட்டு, அவரின் 1 மணி நேர சம்பளத்தை சேகரித்து தருகிறான் - (ஞாபகம் வந்ததா? ) இப்படித்தான் நம் நாளும் போகிறது. வேலைப்பழுவில், நேரம் போவதே தெரியாமல் நாட்களை கழிக்கிறோம்.. அந்த காலத்திலும் தான் ஆணும் பெண்ணும் உழைத்தார்கள், ஆனால் "work while you work , play while you play" என்பதுபோல், நல்ல "work - family life balance" இருந்தது. எப்படி இது முடிந்தது? என்றாவது யோசித்திருக்கோமா?
நேரம் பற்றி யோசித்ததால் தானே இவ்வாறெல்லாம் எண்ணம் போகும் .. நாம் தான் அதைப்பற்றி சிந்தைப்பதே இல்லையெ! "என் நேரமே சரியில்லை.. " இதனை மட்டும் பல முறை சொல்லிக்கொள்கிறோம். காலத்தின் பயன் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும், காலத்தின் மதிப்பறிந்து, வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் !
உங்கள் நேரத்தை இனியும் இந்த பதிவில் வீணாக்கவிரும்பவில்லை !
அன்புடன்
தீக்ஷண்யா
Comments
ரங்கு ஏதாவது வாலாட்டினாரா? (அதெல்லாம் எப்பவோ கட் பண்ணி இருப்பீங்களே?)
என் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி!
:)
CU
Ungakita irunthu Niraya ethirParkirom (" ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்.." -polla) ,
nalla elluthunga.
Nalla varuvinga...
Mindla vachikiran.
:-)
When I read the title of the post, I got reminded of the song from Vettaiyadu vilayadu.
Song: Manjal veyil
Lyrics: Indha nodi indha nodi, ethanayo kaalam thali, nenjoram pani thuli.
Voracious Blog Reader
anbudan aruna