பசுமை நிறைந்த நினைவுகளே..


இந்த பாட்ட கேட்டதும் (ஃபேர்வல்), அதாங்க பள்ளிக்கூட, கல்லூரி பிரிவு உபச்சார விழாதான் நம்ம ஞாபகத்துக்கு வரும். இப்படி பல பாடல்கள் சில நிகழ்ச்சிக்காகவே நம்ம ஆட்கள் வச்சிருப்பாய்ங்க நம்ம மக்கள். எடுத்துக்காட்டா 'வாராயோ தோழி வாராயோ - கல்யாணம், இளமை இதோ - புத்தாண்டு'..எங்க ஊர்ல இருக்கிற பெண்களுக்கான கல்லூரிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி.


நான் பி.எஸ்ஸி படிக்கும்போது,ஒரு செட் சேர்ந்தோம் பாருங்க, சும்மா லெக்சரர் எல்லாம் நடுங்குவாங்க எங்க வகுப்புக்கு வரதுக்கே, அவ்வளவு அடக்கம்! கடைசி பென்ச்! சேட்டை எல்லாம் செய்யரதுக்குன்னே வந்திருக்கீங்களான்னு கேப்பாங்க எல்லாரும். HODயை வாரம் ஒருமுறை சந்திச்சிரனும் எங்களுக்கெல்லாம்! மொத்தம் 10 பேர். இம்சை தாங்காம ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பெஞ்சில உக்கார சொல்வாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.லேடீஸ் காலேஜில படிச்சா நிறைய இம்சை பொண்ணுங்களுக்கு கிடையாது. அம்மா அப்பா ரொம்ப ரிலாக்ஸா இருப்பாங்க - நொய் நொய்னு பசங்க பத்தி அட்வைஸ், வார்னிங் எல்லாம் சொல்ல சந்தர்ப்பம் இருக்காது. ஏன்னா எங்களுக்கு போக வர காலேஜ் பஸ், மத்த படி காலேஜுக்குள்ள பசங்க நுழைய முடியாது. தங்கச்சிய இறக்கிவிட வந்தேன், கூட்டிட்டு போக வந்தேன்னு கூட உள்ள வர முடியாது! ஒரு அட்டண்டர், ரெண்டு வாட்ச்மேன், 2 பஸ் டிரைவர் அவ்வளவுதான் எங்க கல்லூரி தேசத்துல ஆண்கள் ஆதிக்கம்!


வருஷா வருஷம் ஃபீஸ் கட்டவேண்டிய நாள், எக்ஸாம் ஃபீஸ் எல்லாத்தையும் கடைசி நாள் அன்னைக்கு தான் கட்டுவோம், இல்லைன்னா, கட்டாதவங்களுக்கு ஒரு க்ரேஸ் நாள் தருவாங்களே அப்போ தான் கட்டுவோம், ஏன்னு கேட்டீங்கன்னா, வீட்ல எல்லாம் ஃபீஸ் கட்டனும்னு சொன்ன உடனே, வசூலிச்சிருவோம், அதை செலவழிச்சிட்டு கடைசி நாளுக்குள்ள தேத்தனும்ல, அதுக்கு தான் இவ்வளவு கஷ்டமும்!!


எக்ஸாம்னாலே ரொம்ப கொண்டாட்டம்தான் எங்க மக்களுக்கு. க்ருப் ஸ்டடிங்கிற பேர்ல யார் வீட்லயாவது ஸ்டடி லீவ் எல்லாம் கழிச்சிட்டு முந்தின நாள் தான் தனியா படிப்போம். டீ எல்லாம் ஃப்ளாஸ்கில நிரப்பிட்டு பெட்ரூமுக்கு எடுத்திட்டு போய், முதல் கப் குடிச்சு முடிச்சிட்டு, ஒரு மணி நேரம் மட்டும் தூங்குவோம்னு அலாரம் எல்லாம் வச்சிட்டு, தூங்கிருவோம். அப்புறம் அலாரம் அடிச்சுதா, எந்திருச்சியான்னு எல்லாம் கேட்கக் கூடாது! காலைல 6 மணிக்கு எந்திருச்சு, அம்மாக்கிட்ட நாந்தான் தூங்கிட்டேன்னா, நீங்களாவது எழுப்பியிருக்க கூடாதான்னு சொல்றது,அம்மா திரும்ப ஒரு முறை கொடுப்பாங்க பாருங்க, சூப்பரா இருக்கும், அப்படியே வேகம் வேகமா, குழிச்சிட்டு, காலேஜ் போயிருவேன்.


அங்க நம்ம மொத்த செட்டும் இருக்கும் பாருங்க - சும்மா சூப்பரா இருக்கும்!! நீ என்ன பாடம் படிச்ச, அதை கொஞ்சம் சொல்லுடின்னு ஒருத்தர் ஒருத்தர்கிட்ட போய் கேட்டு 10 மணிக்குள்ள நல்லா தேத்திருவோம். என்ன சொல்லுங்க நாமளா படிக்கறத விட இப்படி செவி-வழி கல்வி நல்லா மனசில தங்கும்! தியரி பேப்பர் எல்லாம் இந்த கதை தான். ப்ரோக்ராமிங் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருவோம்ல! 10 பேர்ல ஒரு 5 பேராவது டாப் 5ல இருப்போம்.


மத்தியானம் பரீட்சைன்னா, காலைலதான் ஆரம்பிப்போம் படிக்க! கடைசில 10 பெரும் அரியர்ஸே வைக்காம பாஸ் பண்ணிட்டோம்ல! எப்படி!! இதுல 4,5 பேர் ரேங்க் ஹோல்டர்ஸ் வேற!! இந்த லவ் பண்ற பொண்ணுங்களை தான் ஓரங்கட்டி கிண்டல் பண்ணுவோம். ரோஸ் வச்சிட்டு காலேஜ் வந்தா ஒரு கிண்டல், சேலை கட்டிட்டு வந்தா ஒரு கிண்டல், புது ஹேண்ட் பேக் கொண்டுவந்தா ஒரு கிண்டல்னு ஓட்டிவோம்!


இந்த ஃபைனல் இயர் அழகான காலம். மிக சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கும். செட் சாரி (சேலை) ன்னு ஒரு பழக்கம் இருக்கும் எல்லா லேடீஸ் காலேஜ்லயும். அதாவது செட்ல இருக்கிற அத்தனை பேரும், ஒரே மாதிரி, ஒரே கலர்ல சேலை கட்டி, ஃபோட்டோ எல்லாம் எடுத்து ஞாபகார்த்தமா வச்சுக்குவாங்க! அனேகமா அந்த சேலையை அன்னைக்கு மட்டும் தான் எல்லாரும் கட்டுவாங்க, அதுக்கு அப்புறம் அது பீரோவில தூங்கும்.


எங்க செட் மட்டும் இதை செய்யல. அப்படி கட்டுற மக்களை எல்லாம் எக்கச்சக்கமா கிண்டல் பண்ணி ஏண்டா கட்டினோம்னு ஃபீல் பண்ணவச்சிருவோம். திட்டி தீர்த்திருவாள்க எங்கள! அதுக்கும் வெட்கமில்லாமல் சிரிப்போம்னா பார்த்துகோங்க! லெக்சரர் திட்டினாலும் இதே ரியாக்ஷன் தான் குடுப்போம், கடுப்பாயிருவாங்க.


ஃபேர்வல் அன்னைக்கு எல்லாரும் ஆட்டோகிராப் கேட்பாங்க எழுதுவாங்க. நாங்க யாரு ! எல்லாருக்கும் எல்லாம் எழுத மாட்டோம்ல , ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் எழுதுவோம். அப்ப பார்த்து அழுவாய்ங்க சில பேர், "இனி எப்போடி பார்ப்போம்", "போன் பேசு என்ன","லெட்டர் போடுபா" இப்படி எல்லாம் சொல்லி பெனாத்துவாய்ங்க! ஒரே காமெடியா இருக்கும். நாங்க கெக்க பெக்கேன்னு சிரிப்போம் அப்ப, அத பார்த்திட்டு அவங்க தன்னால நொந்துருவாய்ங்க! இன்னைக்கும் இவிங்க திருந்தலையான்னு நினைச்சு தனக்கு தானே திட்டிக்குவாங்க!


நாங்க படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் காலேஜ் போனப்போ, எங்க ஜூனியர்கள் கிட்ட எங்களை திட்டின, பல முறை வார்ன் பண்ண ஹெச்ஓடி, லெக்சரர்ஸ் எல்லாரும் "இவங்க உங்க சீனியர்ஸ், நல்ல பிள்ளைகள், அருமையா படிப்பாங்கன்னு" சொல்லும்போது நம்ம சேட்டையை கொஞ்சம் குறைச்சு பண்ணியிருக்கலாமோன்னும் தோன்றியது!!

29 comments:

Voracious Blog Reader said...

Hello Deekshanya,

A post after a long time. Great. Read your post about your office scenario.

Am I the only person finding it hard to read the tamizh in the blogs or do others also face it?

I am able to follow some blogs written in Tamizh and others not. Is it to do with the font settings?

Have a nice day ahead.

Voracious Blog Reader

Ravi said...

Though I was reading your posts starting few months back, recent-a unga pazhaiya post ellaam padichen. Romba arumai esp about the college/school galattas. Madurai madhiri oru oora vittitu eppadi dhaan Bangalore-la irukeengalo? No offences meant for Bangalore but andha punpaduthadha nakkal pechu, the "Mannin manam" - idhu ellaathukkum Madurai oru special idam dhaan.

Break eduthaalum, nalla post pottu kalakiteenga. Danks!

Syam said...

ஜிஸ்டர்...எழுத்து ரொம்ப பெரிசா இருக்கு....இருங்க டாக்டர் கிட்ட போய் என்னனு கேட்டுக்கிட்டு வந்து படிக்கறேன் :-)

Kittu said...

romba naal aachu inga vandhu but unga post ellaam semmayaa irukku...

ninaviugalnu solli ellaar manasayum kindi vittuteenga :-)

kalakkal post. maelum niraya ezudhungal..kandippa inimae varuvaen.

Deekshanya said...

@VBR - //Am I the only person finding it hard to read the tamizh in the blogs or do others also face it? // Oh no! Not able to read the tamil font? I use
e-kalapai the font recommended by naatamai syam!! Try installing that in your comp. i guess it should work!

Deekshanya said...

@ravi - thanks pa for ur comment! //Madurai madhiri oru oora vittitu eppadi dhaan Bangalore-la irukeengalo? No offences meant for Bangalore but andha punpaduthadha nakkal pechu, the "Mannin manam" - idhu ellaathukkum Madurai oru special idam dhaan. // kashtam than, but am family and both of us are employed here, so cant help.. jilebi desam atleast for the next 2 years!! But Madurai is the best!!

Deekshanya said...

@Naat! - enanga naat romba naal intha pakkam kanom.. oho romba naala naama eluthalaiyo, how are u, thangamani, poorikattai and lovely mugil? varthai ellam perusa theriyuthaa, vayasayiruchula, othukonga atha!! sari sari doctor kita kamichitu, vanthu 2 comment potutu ponga!!

Deekshanya said...

@kittu - pepsi uma mathiri sonaalum athan unmai " unga anbukku romba nanri, padinga, epovum padichitay irunga!"
Thanks pa for the lovely comment!!

Syam said...

//how are u, thangamani, poorikattai and lovely mugil//

we are all doing great..thanks for asking :-)

Syam said...

அப்புறம் சங்கத்து சிங்கம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள் :-)

Syam said...

//கட்டனும்னு சொன்ன உடனே, வசூலிச்சிருவோம், அதை செலவழிச்சிட்டு கடைசி நாளுக்குள்ள தேத்தனும்ல, அதுக்கு தான் இவ்வளவு கஷ்டமும்//

சேம் பிளட்...படிக்க படிக்க அப்படியே காலேஜ் போன எபக்ட் வந்துருச்சு :-)

Arunkumar said...

helo epdi irukkinga? aprom font size en ivalo perusa irukku? :)

ootukku poi padichittu commentaren. take care and have a nice weekend :)

Dubukku said...

பழைய நினைவுகள கிளறி விட்டுட்டீங்க...நல்லா எழுதியிருக்கீங்க !

Arunkumar said...

//
பழைய நினைவுகள கிளறி விட்டுட்டீங்க...நல்லா எழுதியிருக்கீங்க
//
naan idhai pala murai vazhi mozhigiren :-)

supera ezhudi irukkinga deeksh

Arunkumar said...

indha story ellam oru episodela mudikka koodaathunga.. koranja pacham 13 episodes poganum :-)

ambi said...

naan thaan lateaa? solrathu illaya? :)


//மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி.
//
yeeh! yeeh! Gumthalakkadi gummaava? LDC naa summaava?nu naanga American college paatu paaduvoom illa!

super post sister!

அருட்பெருங்கோ said...

இப்பவே மலரும் நினைவுகளா?
கல்லூரி கதையெல்லாம் சொன்னா ஒரு பதிவு பத்தாதுங்க… :-)

Deekshanya said...

@syam - //அப்புறம் சங்கத்து சிங்கம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள் :-) //
நன்றி தலை. எல்லாம் உங்க ஆசிர்வாதம்!


//சேம் பிளட்...படிக்க படிக்க அப்படியே காலேஜ் போன எபக்ட் வந்துருச்சு :-) // அடடா, உங்கள காலேஜுக்கு அழைச்சிட்டு போயிட்டேனா ...

கமெண்ட்டுக்கு நன்றி தலைவா!!

Deekshanya said...

@Arunkumar -
//naan idhai pala murai vazhi mozhigiren :-)//
how sweet!! thanks arun!

//koranja pacham 13 episodes poganum :-) //
அய்யோடா என் மேல இவ்ளோ பிரியமா??

Deekshanya said...

@Dubukku -
//பழைய நினைவுகள கிளறி விட்டுட்டீங்க...நல்லா எழுதியிருக்கீங்க ! //

நன்றி பெரிய-தல! என்ன சொல்லுங்க, உங்க சென்ஸ் of humour கிட்ட நெருங்க முடியாது!

Deekshanya said...

@ambi - //yeeh! yeeh! Gumthalakkadi gummaava? LDC naa summaava?nu naanga American college paatu paaduvoom illa!
super post sister! //

அப்பாடா நம்ம மதுரையின் தலைமகன் வந்து தன் கருத்த சொன்னதுக்கு அப்புறம் தான் இந்த போஸ்ட் கலை கட்டுது போங்க! நன்றி brother!

Deekshanya said...

@அருட்பெருங்கோ
முதல் வருகைக்கு - கோடி நன்றிகள்!
உங்கள் வருகையும் பின்னூட்டமும் எனக்கு பேரானந்தம்! நன்றி!!

Priya said...

Deeksh, coming here after a while. Kalakkittu irukkinga..
Women's collge la padikkaradhu thani jolly pola irukku.

Ravi said...

Deekshanya, enna aachu? thirumba velai jaasthi aayiduchaa? Waiting for new posts...

இசக்கிமுத்து said...

நெஞ்சில் இருந்த என் கல்லூரி நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள்!! அருமை!!

இராம் said...

திக்ஷ்ண்யா,

உங்களை Weird பதிவுக்கு Tag எடுத்துருக்கேன்.. பாருங்க :))

Raghs said...

@தீக்ஷண்யா,

ரொம்ப நல்ல பேருங்க.. ரொம்பக் கூர்மையான ஆளோ? (படிப்புல,அறிவுல ஆவ்வ்..)..

முதல் முறை வருகை இங்கே. பூவையர் வலைப்பதிவில் இருந்து இங்கே ஜம்ப்-பினேன்.

பசுமை நிறைந்த நினைவுகளே - படித்த உடனே இதானா ன்னு நெனச்சேன்..நெனச்ச மாதிரியே கலக்கிட்டீங்க...

ரொம்ப நல்லாயிருந்தது உங்க எழுத்து நடை.. சிரிப்பாகவும், அதே சமயம் நல்ல விவரிப்புடனும் கூடிய நடை..

வாழ்த்துக்கள்..

ரொம்ப நாளா ஆளையே காணோம் போல இருக்கே? வேலைப்பளு காரணமா?

தோழமையுடன்
இராகவன் என்ற சரவணன் மு.

Raj said...

Deekshanya,

pinni edukkureengka..
Really superb describing happy college days.
Madurai people oda blogs vantha atha miss pannama padippomla.....

Raj said...

Deekshanya,

tamil il type pannuvatharku viruppam.
eppadi type seivathu?
ungkal uthavikku nanri.

eppothu ungkalin atutha blog padaippu?

maduraiyil college valkai patri
any more blogs ? velinaattil valnthaalum vijay tv yil varum "madurai" serial parthal thani makilchi thaan.