பசுமை நிறைந்த நினைவுகளே..
இந்த பாட்ட கேட்டதும் (ஃபேர்வல்), அதாங்க பள்ளிக்கூட, கல்லூரி பிரிவு உபச்சார விழாதான் நம்ம ஞாபகத்துக்கு வரும். இப்படி பல பாடல்கள் சில நிகழ்ச்சிக்காகவே நம்ம ஆட்கள் வச்சிருப்பாய்ங்க நம்ம மக்கள். எடுத்துக்காட்டா 'வாராயோ தோழி வாராயோ - கல்யாணம், இளமை இதோ - புத்தாண்டு'..எங்க ஊர்ல இருக்கிற பெண்களுக்கான கல்லூரிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி. நான் பி.எஸ்ஸி படிக்கும்போது,ஒரு செட் சேர்ந்தோம் பாருங்க, சும்மா லெக்சரர் எல்லாம் நடுங்குவாங்க எங்க வகுப்புக்கு வரதுக்கே, அவ்வளவு அடக்கம்! கடைசி பென்ச்! சேட்டை எல்லாம் செய்யரதுக்குன்னே வந்திருக்கீங்களான்னு கேப்பாங்க எல்லாரும். HODயை வாரம் ஒருமுறை சந்திச்சிரனும் எங்களுக்கெல்லாம்! மொத்தம் 10 பேர். இம்சை தாங்காம ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பெஞ்சில உக்கார சொல்வாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.லேடீஸ் காலேஜில படிச்சா நிறைய இம்சை பொண்ணுங்களுக்கு கிடையாது. அம்மா அப்பா ரொம்ப ரிலாக்ஸா இருப்பாங்க - நொய் நொய்னு பசங்க பத்தி அட்வைஸ், வார்னிங் எல்லாம் சொல்ல சந்தர்ப்பம் இருக்காது....