தொடரும்...
தினசரிகளில், பத்திரிக்கைகளில் காணும் வார்த்தை
மெகா சீரியல்களால் தொ(ல்)லைக்காட்சியில் பெற்ற பிரசித்தியுடன்
பள்ளி,கல்லூரி இறுதி நாட்களில், எழுதும் ஆட்டோகிராப்களில்
ஜொலிக்கும் இவ்வார்த்தை!
எது தொடர்ந்து வரும் நம்மோடு ?
தனிமையில் வதங்கும் சிலரிடம் கேட்டால்
நம் நிழல் மட்டுமே என்ற பதில்கிட்டும்
நல்லதே நடக்கும் என்று நம்பும் மக்களுக்கோ
கடவுள் நம்மை தொடர்ந்தே வருகிறார் என்பார்
இல்வாழ்க்கையில் சில காலம் வாழ்ந்தோர் வாதமோ
இன்மைகளே என்றிருக்கும்.
ஒரு குழந்தையிடம் கேட்டால் உடனே வரும் பதில்
என்னோட அம்மா-அப்பா.
இதில் எது உண்மை - நம்மோடு இறுதி வரை தொடர்ந்து வருவது எது ?
ஆழ்ந்து யோசித்ததில் உதித்தவை..
நாம் செய்யும் நன்மை - தீமை - அவற்றால் ஏற்படும் நினைவுகள்
நம்மை உண்மையாக நேசிப்போர் கொண்ட பாசம்
இந்த உலகில் நம்மை நோக்கிவரும் சோதனைகளில் நம்மோடு
துணையாக நிற்கும் நம் பெற்றோரின் பிரார்த்தனை
அன்பான நட்பு, விவரம் தெரிந்து வந்த அந்த முதல் காதல்,
நாம் உண்மையாக நாமாக, உணர்ந்து வாழ்ந்த அந்த சில நிமிஷங்கள்,
இவை மட்டும் நம்மைத் தொடரும்
கடைசி முறையாக காற்றை உள்வாங்கி வெளிவிடும் நேரம் வரை.
இங்கு சொன்னவை ஒவ்வொன்றும் இறைவன் நம்மோடிருக்கிறார் என்று உணர்த்துவன ......இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம் நம்மை தொடருவது எது என!
Comments
Shadows follow when we feel alone.
God - when people struggle with problems
Love follows when we are undecided.
Family follows till we live with them.
Friendhsip follows when their is continuity but stays in heart and never fades.
fitting photo and appropriate words.
அனைத்து வரிகளும் நல்லா இருந்தது.
அருமையான பதிவு.
எப்படி இருக்கீங்க? ஏதோ பின்னூட்டத்துல இப்படி கேட்கறான்னு நினைக்காதீங்க.. mail எழுத நேரம் இல்லை :) உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி!
Dear Priya,
Hope all is well with you dear! Thanks for your comments.
Arun,
thanks :)) Yup, I liked the pic too, glad it went well with the poem.
My Friend,
Kanavar office ponathum, nanum enofficeku vanthiduvain... :) Thanks dear. Looking forward for your next post on your school.
அன்பு skm,
நலம்தானே? வருகைக்கு மிக்க நன்றி!
நண்பர் ராம்-க்கு,
வணக்கம். பின்னூட்ட்த்துக்கு நன்றி! VIVA மதுரை!!!
[ ஸாரி உங்க பெயர் தமிழில் டைப்பண்ண தெரியலீங்க-
தீக்ஷன்யா -> இது சரியா???]
thanks for stopping by.You spelled my name right! And thanks a lot for that compliment!!
Ithu Thodar(um)a.
Valthukkal....
Mani