அம்பையில் கல்வி

அழகிய அம்பாசமுத்திரத்தில் என் பள்ளிப் படிப்பை 2 ஆண்டுகள் தொடர அமைத்துத் தந்த அந்த ஆண்டவருக்கு நன்றி! அப்பாவுக்கு பணி நிமித்தம், 2 ஆண்டுகள் விக்ரமசிங்கபுரத்தில் (என்ன அழகான பெயர், ஊரும் அப்படியே) இருக்க வேண்டியதாயிற்று. அம்பைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு ஊர். ஆதலால் நானும் அங்கே(அம்பையில்) உள்ள விகாஸா பள்ளியில் சேர்ந்தேன்.

சில விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கையில் அதன் நோக்கம் புரியாது, ஆனால் இறை நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் அர்த்தம் உண்டு, மற்றும் அது நமக்கு புரியவேண்டிய தருவாயில் மட்டுமே அது நம் அறிவுக்கு விளங்கும். இந்த பள்ளியில் நான் சேர்ந்ததும் அப்படி ஒரு நிகழ்வு!

நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, செய்யும் சேட்டைகள் எல்லாம் சுற்றத்தில் மிகப் பிரபலம். அனைவருக்கும் செல்லம், அதனால் பள்ளி என்றாலே பிடிக்காது(அங்கு நான் என் சேஷ்டைகளை செய்ய இயலாதே). ஆனால் நான் நன்றாக படிப்பேன். என் அம்மா அப்பா ஒரு நாளும் எனக்கு படிப்பு (homework) சொல்லிக் கொடுத்ததோ, பயில்வித்ததோ, படி என்று சொன்னதோ கிடையாது. பள்ளி விட்டு வந்தவுடன் homework எல்லம் முடித்துவிட்டு, விளையாட ஓடிவிடுவேன்.indoor games-னா என்ன என்பது போல எல்லாமே வீட்டுக்கு வெளியேதான். தூங்கும் நேரம், அம்மாவோ, அப்பாவோ பக்கத்து வீடுகளுக்குள் எல்லாம் தேடி தர..தரவென்று இழுத்துக்கொண்டுதான் போய் படுக்கவைப்பார்கள். :)

இப்படி செல்லமாக வளர்ந்துக்கொண்டு இருக்கையில் தான், அம்பை விகாஸாவில் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட வகுப்பு அது. பெரும்பாலும் அப்பாவின் companyயை சேர்ந்தோரின் பிள்ளைகளே என்னோடு பயின்றனர். சில பெயர்கள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன - இந்து,Debbie,கைலாஷ், நவீன்,வினோத் shakespeare, திருமுருகன்,சுகன்யா,வனிதா,சோலைராணி,வித்யா,சரஸ்வதி, சிந்துஜா,தேவி....... சிலருடன் இன்னும் நட்பு உண்டு.

Games hour -ல் நாங்கள் Throwball,Dodgeball,Tennikoit,Ball Badminton எல்லாம் விளையாடுவோம்,மற்றபடி athletics,drill எல்லாம் கூட உண்டு. Extra curriculum பற்றி நிச்சயம் சொல்லனும்... Art & Craft,Gardening, Musical Instruments, Vocal Singing - western and Classical, Typewriting, Science Club (Nature), Photography, Swimming, Dramatics, Cookery (இதில் பெரும்பாலும் பையன்களே சேருவார்கள், reason: every evening you get something tasty to eat, and the best part -- you make it yourself. I learnt how to make pancakes, cakes, cookies , burfies here only) இன்று இதெல்லாம் பயில்விக்கும் ஒரு பள்ளிக்கூட எனக்குத் தெரியாது!

அனைத்து ஆசிரியர்களும் அருமையான மனிதர்கள். பாடம் சொல்லித் தரும்போதும், வகுப்பரைக்கு வெளியிலும், மிகவும் அன்பாக இருப்பர்.என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள் அவர்களை பற்றி:
1) We used to address them by name eg. Mr.Ram, Sundari Ma'am, Mr.Claude.

2) They were so much involved in all our activities, all the staff used to take part in the games hour, in whatever games they were comfortable in.We had a chemistry teacher who also trained us in athletics!

3) They taught us to address our subordinate staff,drivers,peons,aayas,gardeners not by their name but as anna /akka!

My best moments there:
1) When I delivered the Independance day speech on behalf of all the students (LKG to class X) in front of all my teachers,headmaster, parents and guests! My first speech addressing a big crowd! I was in class 5 then!

2) When I scooped, close to 12 prizes in sports,academics and extra curriculum in a year and won the 'BEST ALLROUNDER AWARD' and my parents were there, without knowing I would be winning so many prizes. There were so many parents congratulating them every time I went onstage to recieve a prize... There were even neighbours coming to my house the next day to see the number of prizes I had won! I day I felt my existence really meaningful and made mom and dad proud of me!

சுருங்க சொல்ல வேண்டுமென்றால், என் திறமைகளை எனக்கே உணர்த்திய பள்ளி அது. என்னை எனக்கு அடையாளம் காட்டிய இடமும் அதுதான்..

12 comments:

பொற்கொடி said...

en schoolum apdi than :) ida patiyum padhiva potudaren seekiram. nalla irundadu padhivu!

Deekshanya said...

thnx porkodi - for the comment and diwali wishes!

தி. ரா. ச.(T.R.C.) said...

Having invited by ambi I recently visited kallitai kuruchhi.i enjoyed the rural way of life.Fresh bath at tamprabharani and visit ampai,V.K.puram and Akasthiyar falls.we had a good one hour bath at aruvi.the hospitality of T'ly people is wonderful.There is no wonder u would have enjoyed more during your stay of a longer period.your father should have worked in Madura Coates.

தி. ரா. ச.(T.R.C.) said...

!There were even neighbours coming to my house the next day to see the number of prizes I had won! I day I felt my existence really meaningful and made mom and dad proud of me!


"
"என்நோன்பு நூற்றாளோ இவளைப் பெற்ற வயிருடையாள்தான்" போங்க.தீபாவளி வாழ்த்துக்கள்

Syam said...

innum school la padicha ivalo peroda names nyabagam vechu irukeenga...really great memory :-)

கைப்புள்ள said...

//சுருங்க சொல்ல வேண்டுமென்றால், என் திறமைகளை எனக்கே உணர்த்திய பள்ளி அது. என்னை எனக்கு அடையாளம் காட்டிய இடமும் அதுதான்..//

நல்லா எழுதிருக்கீங்க தீக்ஷ்! நம்ம அல்மா மேட்டர் பத்தி எழுதுறது பேசறதுன்னாலே எப்பவுமே ஒரு சந்தோஷம் தான் இல்லியா? 10வதிலிருந்து 12வரை மதுரையில் படித்தீர்களா?

Deekshanya said...

அன்பு கைப்புள்ள,
எப்படி இருந்தது தீபாவளி? நான் படிச்சது:

LKG- 2nd - Vikaasa Madurai
3,4th std - Manora Vikaasa- Tuty
5,6 std- Vikaasa Ambas
7,8,9,10 - Vikaasa Madurai
11,12 (Science,Math,CompSci) - Jeevana Madurai..
(ஹப்பா.. இப்போ மூச்சு விட்டுக்கலாம்!)
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்கநன்றி.
-deeksh

Deekshanya said...

syam - வணக்கம் நாட்டாமை! தீபாவளி எல்லாமெப்படி? வழக்கம் போல சாப்பாடு எல்லாம் ஒரு கட்டு கட்டியிருப்பீங்கள்ள?? ஞாபகம் .. அதான் சொன்னேனே, அந்த memory power னால, ரொம்ப நன்மைகள் & கொஞ்சம் drawbacks :)

Deekshanya said...

TRC Sir
//"என்நோன்பு நூற்றாளோ இவளைப் பெற்ற வயிருடையாள்தான்" போங்க.//
Oops am honoured... thanks for that comment..என் blog பக்கம் வந்தமைக்கு நன்றி. அடுத்த புதன் நான் சென்னைக்கு வருகிறேன், என் நண்பரின் திருமணத்திற்கு.

Deekshanya said...

Yes TRC sir, dad was associated with Madura Coats then.

கைப்புள்ள said...

//அன்பு கைப்புள்ள,
எப்படி இருந்தது தீபாவளி? //

சூப்பரா இருந்துச்சு. இன்னும் அம்மா வீட்டுல தான் இருக்கேன். நாளைக்கு மாமியார் வீட்டுக்குப் போகனும்(அதாங்க நான் வேலை செய்யற எடம்):)

நாளைக்குப் போகனும்னு நெனச்சாலே ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு.
:(

Deekshanya said...

ha ha,same blood... நேற்று எனக்கு இப்படித்தான் இருந்தது. கடுப்பா இருக்கு office-ல இருக்க.அடுத்து Dec 25th மட்டும் தான் leave இந்த வருஷத்துல :(