Coffee Beans காபி!


ஆபீஸ்ல மத்தியானம் செம போரான time. என்ன செய்யரதுன்னே தெரியாது. அதனால இந்த TT விளயாடறது காபி குடிக்கறது எல்லாம் peak frequency-ல அப்போ தான் நடக்கும். இப்படி நேத்து மத்தியானம் Bore-ன் எல்லைக்கே போயிட்டேன்னா பார்த்துக்கோங்களேன். காபியை தேடிய மனசுக்கு இதமா இருக்கட்டுமேன்னு vending machine பக்கம் பார்த்தா சட்றே பெரி.......................ய queque! இன்னொரு 5 நிமிஷத்த ஓட்டலாம்னு முடிவு பன்னி நின்னேன். என்னோட opportunity வந்தது. cluck- னு ஒரு சத்தம். காபி மெஷின் வேலை பார்க்கமாட்டேன்னு அடம்! சரி நமக்கு வாய்ச்சது அவ்வளவு தான்னு கிளம்பும்போது மெஷின் மேல இருந்த coffee beans-அ தற்செயலா பார்த்தேன்.
என்னோட வீட்டுக்கரர் சரியான perfume விரும்பி. கடைல ஒவ்வொரு perfume வாங்கும் போதும் நடுவில் smell பண்ண இந்த coffee beans - அ தான் தருவாங்க. நல்ல smell தான்! அந்த நியாபகமா ஒரு 5 எடுத்துட்டு என் desk -க்கு திரும்பினேன்.
வேலைக்கு நடுவே அத அப்பப்போ எடுத்து smell பண்ணிட்டு இருந்தேன். இந்த Dilwale Dulhaniya Le jayenge படத்துல Sharukh புறாக்கு தர்ற தானியத்த வாயில Style-ஆ போடறா மாதிரி நானும் 2 coffee beans- அ போட்டுட்டேன்!! அப்புறம் தான் நம்ம அறிவு " ஏய் லூஸு என்னா திங்கற்ன்னு " கேட்குது!
கீழ விழுந்தாலும் எதுலயோ மண் ஒட்டாதுன்னு சொல்வாங்களே !! அது மாதிரி நம்ம வீர மதுர தமிழச்சி (அட நாந்தாங்க அது) அத்தனையும் சாப்பிட்டேன்! அப்புறம் Night தூங்கும் போதும் காபி வாசனை அடிச்சது வேற கதை!
நம்புங்களேன் நல்லாதான் இருந்தது அந்த taste!! (கற மொறன்னு கசப்பா)

Comments

Syam said…
bore adikuthuna ennalaamo seivaanga,aana kaapi kottaya saapidalaamnu puthu technic kandu pudicha Deekshanya elloru jora oru "O" podunga..... :-)
Deekshanya said…
O ellam podara alavuku periya aal ellam ilainga! Anyway thanks for the comment.
Deekshanya, Thanks for visitng my blog..

Bore adichcha naan net-tai vittu veliya varrathe illai..illaina ovvoru cube-a pOi yaaraiyum velai cheyya vidama arattai thaan
தீட்சண்யா(மேடம்)!
மேடம்னு சொன்னா கோச்சிக்கிறாங்க...அதான் பிராக்கெட்ல போட்டுருக்கேன். புடிக்கலைன்னா சாய்ஸ்ல விட்டுடுங்க.
:)

உங்களோட இந்த 'காஃபி கொட்டை கொறித்தல்' வித்தியாசமான பொழுதுபோக்கா இருக்கே? இதே மாதிரி என் தம்பி, சில கோதுமை தானியங்களை வாயில போட்டு மென்னு சக்கரை அள்ளிப் போட்டா பபுள்கம் மாதிரி இருக்குன்னு சொல்லுவான். அதை முயற்சி செஞ்சு பாத்ததில்லைன்னாலும், உங்க பதிவைப் படிச்சதும் அந்த நியாபகம் வந்துச்சு.

என்னுடைய ஆறு பதிவில் தாங்கள் இட்டப் பின்னூட்டத்திற்கும் அளித்த ஊக்கத்திற்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் தொடர்ந்து தமிழில் பதிய என் வாழ்த்துகள். தங்கள் பதிவைத் தமிழ்மணத்திலும் சேர்த்து விடுங்கள்.
அட தீக்ஷ் தமிழ்ல வேற எழுதறீங்களா?
Syam said…
அட தல,இளா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...(மேடம்) உங்களுக்கும் சங்கத்துக்கும் தொடர்பு இருக்குனு தெரியாம போச்சே..

தல நானும் பிராக்கட்ல போட்டுட்டேன்... :-)
Deekshanya said…
இளா, ரொம்ப நன்றி என்னோட பதிவு பக்கம் வந்ததற்கு! welcome always!!

அன்பு கைப்புள்ள அவர்களுக்கு, sorry sorry தல, madam எல்லாம் வேண்டாம் தீக்ஷ் - ன்னே கூப்பிடலாம்.உங்க தம்பியும் என்ன மாதிரி அறிவாளி போல(!!), புதுசு புதுசா மெல்லுவது பத்தி நாங்க சேர்ந்து ஒரு புக் எழுதலாமே!

Syam,சங்கத்துல சேர்றது எல்லாம் poster ஒட்டி விழா எடுத்துதான் செய்யனுமா? இதெல்லாம் அன்பால சேருகிற கூட்டம்!

Karthik Sir என்னை தெரியலயா, ஒரே ஆபீஸ்ல குப்பை கொட்டியதுமா மறந்து போச்சு? என்ன அண்ணா இப்படி மறந்துட்டீங்க! 2003 Raksha Bandhan அன்னிக்கு நீங்க தந்த gift இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்!

Keep commenting,it keeps me writing more. thanks.
Deeksh.
ayyO ayyo.. eppai pEr maaththi vachcha eppadi naan easya kandupidikirathu..

Great..You have remember a lot of things..

OK..hereafter I will save details of you with this blog :-))

How is your baby?

Popular posts from this blog

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

THE BEAUTY OF OLD WOMEN