காதலர் தினம்



இந்த உலகம் கொண்ட பொக்கிஷமெல்லாம்
உலகின் முதல் பணக்காரர் கொண்ட பணமெல்லாம்
எழில் கொஞ்சும் மங்கையரின் அழகெல்லாம்
மழலை தரும் மகிழ்ச்சி எல்லாம்
அள்ளி என்னிடம் தந்தாலும் அதற்கு மாறாக,

அந்த முதல் வார்த்தைகள்
நாம் இருவரின் பெயர்களால் நிறைந்த பக்கங்கள்
அருகில் நிற்காமல் சேர்ந்தெடுத்த புகைபடங்கள்
நாம் பரிமாறிக் கொண்ட சின்ன சின்ன பரிசுகள்
பழகிய அந்த அழகான பொழுதுகள்
மனதில் தோன்றிய கவிதைகள்
நமக்காகவே உலகம் இயங்கிய அந்த நிமிஷங்கள்
கடைசியாக நாம் அழுத கண்ணீர் துளிகள்
இதில் எதையுமே நான் தரமாட்டேன்..

ஏதோ சொல்கிறார்கள் ஆன்றோர் சான்றோர்
துன்பம் என்பது, தன்னுடையது என்று ஒரு பொருளை
நாம் எண்ணும் போதுதான் வரும் .. ஈடுபாடு இல்லை
எனக்கிந்த கூற்றின்மேல் உன்னை என்னுடையவன்
என்று எண்ணியபின்தான் எனக்கு,
சந்தோஷம் - இவ்வார்த்தையின் அர்த்தம் விளங்கிற்று..


இப்பொழுது நீ இல்லை,
ஆனால் எனக்குள் இன்னும் உன் முகம்,
அந்த சிரிப்பு, கர்வம் கலந்த அந்த பார்வை
நான்கு விரல் கொண்டு நீ அழகாக கோதிவிடும் உன் முடி
கவிதை எழுதும் போது உன் முகத்தில் தோன்றும் அந்த சிந்தனை....
சொல்வேன் இன்னும் ஏராளம் உன்னைப் பற்றி
ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து என்னிடம் வந்து கேட்டுப்பார்
இதையே சொல்வேன், நம் காதல் அத்தனை வலிமையானது!


சரி இன்று ஏன் உன்னை அதிகமாக நினைவு கூர்ந்தேன்?
ஆங்... காதலர் தினம் ..
இந்நாளை போற்றுவதில் உனக்கு உடன்பாடு கிடையாது,
தினமும் காதலர் தினம்தானடி நமக்கு என்பாய்...
உன்னுடைய ஒரு பழக்கம் - உன்னிடம் சொல்லாமலேயே
நான் ரசித்த ஒரு பழக்கம்
நீ இல்லாத போதும் உன் கருத்தை
நினைவில் வைத்து, அப்படியே நடந்தால்
உனக்கு மிகவும் பிடிக்கும், பெறுமை கொள்வாய்

நீ இல்லாத இன்று, உன் சொல்படியே கேட்கிறேன்
வேண்டாம் எனக்கும் இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்..

மறுமுறை சொல்கிறேன்
வேண்டாம் எனக்கு இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்..
மீண்டும் உயிர் பெற்று வருவாயா,
என்மேல் காதல் கொள்வாயா?

Comments

Anonymous said…
Lovena lovvu mannennai stovvu ;-)

-Leonard Vijay

Kidding.. nice touching one! I kinda hate V-day too! it's to ohyped up.. it's the rest of the days ppl shud be caring about each other..
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தேன், ஒரு பதிவை காணோம்.. இன்னைக்கு வந்தா மூணு பதிவுகள்..

இது சும்மா உள்ளேன் ஐயா தான்

அப்பால படிச்சுட்டு மீதி
Im really happy to put the first comment here...

enna arumaya ezudhareenga...romba romba rasichaen...ungal ezuthil kandippa oru nalla style irukku...i like that...

kadasila vara vaendam indha kaadhalar dhinam..enakku ni namm kaadhal mattum podhum enra vaarthai ellam nalla strong representation of pirivu.

HATS OFF POST
Deekshanya said…
hi Vijay
thanks for your comment! yeah, I agree the hype is increasing day by day for the V-Day. I'm glad you liked the post. Do come again..
Deekshanya said…
@அண்ணன் - ஆமான்னா எழுதி ரொம்ப நாள் ஆனாமாதிரி இருக்கு, fullஆ படிச்சிட்டு உங்க எண்ணங்கள என்னோட ப்கிர்ந்துட்டு போங்க! நல்ல இருக்கீங்கல்ல அண்ணா? ஒரு mail தட்டிவிடுங்க முடிஞ்சபோது.
Deekshanya said…
@கிட்டு - //ungal ezuthil kandippa oru nalla style irukku...i like that...// நன்றிங்க!

//வேண்டாம் எனக்கு இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்.. //
இந்த வரிகளை எழுதும் போது ரொம்ப அழுதுட்டேன், உங்களுக்கும் இது பிடித்தது மகிழ்ச்சி! பிரிவு மிகவும் கொடியது!
Unknown said…
எங்கேயோ படிச்சது…

"இந்த துயரங்களையும் நேசிக்கிறேன்…
ஏனென்றால்
இது நீ தந்தது!"

சொல்வதற்கு வேறொன்றும் தோன்றவில்லை :(
Unknown said…
எங்கேயோ படிச்சது…

"இந்த துயரங்களையும் நேசிக்கிறேன்…
ஏனென்றால்
இது நீ தந்தது!"

சொல்வதற்கு வேறொன்றும் தோன்றவில்லை :(
Deekshanya said…
@அருட்பெருங்கோ -
//சொல்வதற்கு வேறொன்றும் தோன்றவில்லை :( //

உங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! :( என்று உங்கள் முகம் மாறியதற்கு sorry!
Priya said…
Awesome Deeksh..

/வேண்டாம் எனக்கு இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்..
மீண்டும் உயிர் பெற்று வருவாயா,
என்மேல் காதல் கொள்வாயா?
//
romba azhagana varigal..
மு.கா. பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Anonymous said…
Good Blogs....can u dream of your family and write a blog..it is amazing

Popular posts from this blog

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

THE BEAUTY OF OLD WOMEN