ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

சென்ற முறை மதுரை போனபோது, என் பீரோவின் கடைசி தட்டில் வைத்திருந்த புத்தகங்களை அடுக்கும் யோசனை தோன்றியது.புத்தகங்களை வெளியே எடுத்து, தூசித்தட்டி அடுக்கி வைத்தேன். ஒரு பெரிய புத்தகத்திலிருந்து, ஒரு சின்ன தொலைபேசி டயரி கீழே விழுந்தது.

திறந்து பார்த்தால், அது 1997 - 2000 என்னோடு படித்த, பழகிய நண்பர்களின் தொலைபேசி எண்கள்.அப்போது எல்லாம் மதுரை DoT நம்பர்களில் 6 எண்கள்தான் இருக்கும் (605033 போல), இப்போதும் அந்த எண்களை தக்க வைத்திருந்தால், முன்னால் 2 சேர்த்து அழைக்க வேண்டும்,(2605033).

எனக்கு நல்ல ஞாபகத்திறன், முக்கால்வாசி பெயருக்குறியவர்களை நினைவுக்கூறமுடிந்தது, முகம் கூட மறக்கவில்லை. என் மகன் தூங்கிக் கொண்டிருந்தார், அதனால் நான் வேலை ஏதுமின்றி தான் இருந்தேன்.அப்போது தான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, "எல்லா நம்பர்களையும் அழைத்து பார்த்தால் என்ன?" என்று. ஒருவேளை நம் நண்பர்கள் தொலைபேசியை எடுக்காவிட்டாலும்,யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று பிறரிடம் கேட்டுக்கூட தெரிந்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன்.

சிலர் மிகவும் ஆச்சிரியத்தோடு பேசினர்,சிலரின் அம்மா/அப்பாவோடு பேசத்தான் முடிந்தது. அந்த மாதிரி நேரத்தில், அவர்களின் பிள்ளை எங்குள்ளார், என்ன செய்கிறார், அவர்களின் தொடர்பு எண்கள், போன்ற விஷயங்களை சேகரித்தேன். ஒரு சின்ன database-ஏ திரட்டிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

சில தோழிகள் தங்களது பேறுகாலத்திற்காக அவர்களது அம்மா வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களோடு பேசியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு சில எண்கள் துண்டிகப்பட்டோ, மாற்றப்பட்டோ இருந்தன - இதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் - மிகவும் நெருக்கமான சிலரை தொடர்பு கொள்ள இயலவில்லை!

என்னோடு இளங்கலை படித்த நண்பர்கள் இவர்கள். அப்போது, வீட்டிற்கு வந்ததும், தொலைப்பேசியை எடுத்து, எங்கள் gang girls-உடன் பேசுவோம்.இதில் Call Waiting வேற! ஒருத்தியோடு பேசிக்கொண்டிருந்தால், அடுத்தவள் அழைப்பாள், waiting-இல் போட்டு, பேசிக்கொண்டே இருப்போம். அம்மா ' இப்ப தான வந்த college-ல இருந்து - இத்தன நேரம் அவங்களோட அரட்டை அடிச்சிட்டு தான இருந்த, வந்த ஒடனே என்ன பேச்சு???' அப்படின்னு திட்டுவாங்க!

அப்படி என்னத்த தான் பேசுவோம்னு கேட்டா: (மிகவும் popularஆன சில பேச்சுக்கள் இவைதான்)
1) அடுத்த நாள் என்ன colorல dress போடலாம்?
2) என்ன படம் இந்த saturday போகலாம்?
3) நம்ம class-ல ,ரொம்ப silentஆ இருப்பாளே, அந்த பொண்ணை நான் நேத்து ஒரு பையனோட bus stopல பார்த்தேண்டி.... ;-)
4) இந்த sunday யார் வீட்ல பட்டறைய போடலாம் ( பட்டறைன்னா - காலைல ஒருத்தி வீட்டுக்கு போனா அங்கேயே lunch, evening tiffin + TV + நிறைய அரட்டை + assignment(ஒரே matterஅ 5 தனித் தனி assignmentஆ கொடுப்போம்!) + homework(if any - rarely)
5) எப்போவாவது படிப்பு பத்தி பேசுவோம்..

The list is endless!

அது ஒரு அழகிய காலம்.. துள்ளித் திரிந்த காலம்.. அப்போ பார்த்த படங்களில் சில...ஆஹா, காதலுக்கு மரியாதை,காதல் மன்னன், etc. போன இடங்கள் - மீனாட்சி அம்மன் கோயில், shopping, ice cream parlour, கிங் மெட்ரோ hotel, etc..இது போக எங்கள் 5 பேரின் வீட்டிற்கும் கனக்கில் அடங்காமுறை சென்றிருப்போம்!

அந்த அழகான ஞாபங்களை தந்த அந்த சின்ன டயரிக்கு என் உள்ளம் கனிந்த நன்றி! Many thanks to you dear diary!!

Comments

Ravi said…
Wow, nice one Deekshanya. It brought back my college days memories as well. Btw, didn't you (atleast the close gang) keep in touch after college days? I thought you would have had a yahoogroups - at the least!!
Arunkumar said…
very well written. made me nostalgic. i too have a very small diary. will search it next time when i get to my home :)
மிகவும் அழகான மலரும் நினைவுகள் தங்கச்சி..

ஆமா.. என்ன ரொம்ப நாளா ஆளையே கணோம்
Anonymous said…
Hi Deekshanya,

Tamizh-la post-a ? Super pongo.

"ullen ayya" solliyaachu. Ippo poi padikkanum.

Voracious Blog Reader
KC! said…
Deeksh - andha diary-adhan naanum thedaren..infact even yesterday I searched for my husband's email address and found her number today :)) It is a pokkisham indeed.
Deekshanya said…
Ravi
we do have a yahoo group for our close friends, aana no one is active there, other than me!! Most of them arent working, all are home makers with hardly any access to the internet. varusham 1 mail anupuna great!! Phonela than pesikuvom!!!
Deekshanya said…
Arun
Yeah, I felt very nostalgic too when writing this..
Deekshanya said…
அன்புள்ள அண்ணா,
அப்புறம் எப்படி இருக்கீங்க? உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி!!
Deekshanya said…
Dear VBR,
welcome back!! Padichitu comment podunga!
Deekshanya said…
hi Usha
thanks pa.
//infact even yesterday I searched for my husband's email address and found her number today// Puriyala enaku neenga soldra context... Vilakam pls.
Anonymous said…
seri enna pesuvomnu irukkara listla oru mukkiyamana mattera kanume?? Pasangallam meet pannina...setla yevan yaaru kitta pesum pothu jollu vittaannu kalasuvom...neenga athellam panna mattengala illa veetula Rangamani padipaarunu adakki vasikireengala?
ramya said…
//இத்தன நேரம் அவங்களோட அரட்டை அடிச்சிட்டு தான இருந்த, வந்த ஒடனே என்ன பேச்சு???' அப்படின்னு திட்டுவாங்க!//

idhey thitta nannum vangirukken..romba arumaiyana post deeksh akka...enakku ennoda college days nyabagathuku vandhuduchu...
Anonymous said…
A cute one with good memories to bring back joys.
Anonymous said…
Old wine and old memories are precious.. aren't they?
Deekshanya said…
@Dubukku - rangamaniku ellam theriyum enna pathi, nan adaki vasichalum en looti elam avarku nalla theriyum!! Pesuvom pasangala pathi, kalaasuvom, aana eppa paarthalum atha pathiyay pesa mattom! En intha pasanga elarukum intha doubt !! :)

@Ramya - Haa Haa unga ammavum ithay thittu thituvangala.. Same blood!!

@Pria - thanks pa for your comment!

@Veera - warm welcome! Yeah, old wine and old friends are matchless!! Agree wholeheartedly!

- Deeksh
KC! said…
sorry ularitten :))) I searched for "her" husband's email address and found her number
actually I came here to say that I did call her up today and spent a good 1 hr talking to her :)..inga vandhu parthadhan ennoda comment-oda azzhagu theriyudhu :))
ramya said…
ellorum ore kuttaila vizhundha mattain thanunga..enna nan solradhu correcta..
Deekshanya said…
@usha - ok ok.. got it now! thanks for ur time and effort to clarify!

@ramya - amanga 'birds of feather flock together!!' :)
Anonymous said…
சேரன் தோத்தார் போங்க :-)
Syam said…
neenga lucky unga palaya diary kidachuruchu...enaku kidaikaama ennoda figure friends kitta touch illama pochu :-)
Anonymous said…
இன்னொரு அருமையான ஆட்டோகிராஃப்..

//அப்படி என்னத்த தான் பேசுவோம்னு கேட்டா: (மிகவும் பொபுலர்ஆன சில பேச்சுக்கள் இவைதான்)
1) அடுத்த நாள் என்ன கொலொர்ல ட்ரெஸ்ஸ் போடலாம்?
2) என்ன படம் இந்த ஸடுர்டய் போகலாம்?
3) நம்ம க்லஸ்ஸ்-ல ,ரொம்ப ஸிலென்ட்ஆ இருப்பாளே, அந்த பொண்ணை நான் நேத்து ஒரு பையனோட புஸ் ஸ்டொப்ல பார்த்தேண்டி.... ;-)
4) இந்த ஸுன்டய் யார் வீட்ல பட்டறைய போடலாம் ( பட்டறைன்னா - காலைல ஒருத்தி வீட்டுக்கு போனா அங்கேயே லுன்ச், எவெனின்க் டிஃப்ஃபின் + TV + நிறைய அரட்டை + அஸ்ஸிக்ன்மென்ட்(ஒரே மட்டெர்அ 5 தனித் தனி அஸ்ஸிக்ன்மென்ட்ஆ கொடுப்போம்!) + ஹொமெவொர்க்(இஃப் அன்ய் - ரரெல்ய்)
5) எப்போவாவது படிப்பு பத்தி பேசுவோம்..//

அடடே!! இதில் ஒன்றையும் நான் செய்ததே இல்லையே!!! :-?
Deekshanya said…
@Kumari "அப்பாவி - வாங்க வாங்க! முதல் தடவ வந்திருக்கீங்க, நன்றிங்கோவ்!

@Syam - Hello US-aa, en sister Thangamani irukangala? Hey nan un sister Deeksh pesarainya.. No Afterall husband thanay, dont cry-ya, rendu adi podu ellam sariyayidum. No crying, bye.
IPDI PHONE POTTU SOLIDUVAIN.. GAVANAMA IRUNTHUKONGA AAMA...


@.:: MyFriend ::. - Thanks ma! செஞ்சு பாருங்க, எல்லாம் ஜாலியானவை!
Syam said…
//IPDI PHONE POTTU SOLIDUVAIN.. GAVANAMA IRUNTHUKONGA AAMA...
//

ஆகா...கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாய்ங்க :-)
Deekshanya said…
நாட்டாமை - அந்த பயம் இருக்கட்டும். என்ன சொல்லுங்க, அம்மணி பேர சொன்னா, தல சரண்டர் தான்! :)
இதுக்கு தான் நான் என் டைரிய எடுத்து வெச்சேன், ஆனா இப்போ எங்கனு என்னால கண்டு பிடிக்க முடியல :((
தீக்ஷ், வொய் மீ?? ஏனிந்த கொல வெறி :)
Anonymous said…
Nalla idea ,naanum diary kidaikuthanu theduren ;)
Karthik Kumar said…
engapa romba naal aatchu aala kanom.
-Karthic
dubukudisciple said…
Hai deekshanya!!
nice blog and nicely written!!!
padangal illati adoda hero heroine pathi ellam pesa mateengala??
ada pathi ezhuthaliye
Anonymous said…
Hey Deekshanya,

Yenga romba naala aaley kaanum?

Voracious Blog Reader
sangathileye neenga eludha poreengannu potrundhanga ..ada idhu yaru namaku theriyadha ala irukunnu vandhu parthane..sooperunga ..romba nal elduhreenga..valthukkal
Ravi said…
Deekshanya, time for new post!!!
aparnaa said…
this is my first visit to ur blog!!
very interesting..it took me to my college days !! i did my PG in ur sister college, The American college!! so it took my memories back to kingmetro..poonga aryabhavan,pazhamuthir cholai!!!
Deekshanya said…
dear abarna
thanks for coming. wow, so u did ur PG in American College! u can read more of our college galattas which i have written in http://vavaasangam.blogspot.com/
in the post called 'பசுமை நிறைந்த நினைவுகளே..' check it out.
warm regards
deeksh
Vidya said…
There are so many such small things that take us back in time to those wonderful days of school and college and in case even work. You made me get nostalgic. :)

Lovely. Visited after a long time and spent some quality time, thinking of my college days and those friends. Gotta make a couple of calls now. :)
Deekshanya said…
dear vidya
thanks dear for ur comments!!
Ravi said…
Deekshanya, pudhu post-ai aavalundan edhir paarkiren. Eppo pudhu post?
Anonymous said…
Ennanga, allai Kanum...
romba nalla onum elluthala...

Adikadi vanthu parkiran,
Verum manathodu thirumpi selkiran.

Nandri
Mani

Popular posts from this blog

THE BEAUTY OF OLD WOMEN