பாடல்களுடன் ஒரு பயணம்
ரொம்ப நாள் கழிச்சு காரில் ஒரு நெடும் பயணம் - மதுரையில் இருந்து பெங்களூர் வரை. 9 மணி நேரம் ஓட்டிறது ஒரு "ஹெர்கூலியன்" அனுபவமாக இருந்தது! பயணம் செய்யும் போது அலுப்பு தெரியவில்லை, வீட்டுக்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் உடம்பு பட்ட பாடு தெரிந்தது! நடுவில் சேலத்தில் மட்டும் ஒரு காபி சாப்பிட நிறுத்தம், மற்றபடி ஒரே சீராக ஓட்டம்தான். நல்ல வெப்பம் மதுரையில், நல்ல வேளை மழை இல்லை. பயணத்தின் போது கேட்கும் பாடல்கள் நிச்சயம் நல்ல துணை, நேற்று இதை நான் உணர்ந்தேன். முதலில் லேட்டஸ்ட் என்ற பேர் கொண்ட ஒரு எம்.பி.3 சி.டி நிறைய பாடல்கள். கேட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும், அவ்வளவு இரசிக்கவில்லை. எனக்கு ஐபாட் என்றால் இஷ்டம்தான், ஆனால் என்னவோ ஹெட்ஃபோன் என்றால் ஒரு அலர்ஜி.அதனால் அமெரிக்கா சென்றபோது எனக்கென ஒன்று வாங்கவில்லை, தங்கைக்கு ஒன்று வாங்கினேன், அதில் அவள் பெயர் பதித்து! அலுவலகத்தில் மட்டும் பாடல் கேட்கத் தோன்றினால் எப்போதாவது கேட்பேன். எப்போதும் என் வீட்டில் பாடல்களை சி.டி. ப்ளேயரில் கேட்க பிடிக்கும், அதிக சத்தம் இல்லாமல் கேட்க பிடிக்கும், அதிலும் இரவில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்க ரொம்...