மனையாள் அன்பு!
மாலை மணி ஆறடித்ததும், வீட்டு வேலையெல்லாம் முடித்து, முகம் கழுவி, சின்னதாக ஒரு அலங்காரம் செய்து, கனவருக்கு பிடித்த அந்த சிகப்பு காட்டன் புடவை உடுத்தி, ஞாபகமாக மதியமே வாங்கி, ஈரத் துணியில் முடிந்து வைத்த, ஒரு முழம் மல்லியைத் தலையில் சூடி, சீக்கிரமே இரவிற்கான உணவை சமைத்துவைத்து பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு ஆசையோடு காத்திருக்கும் அன்பு மனைவி.... சரியாக ஏழு மணிக்கு, அரபு தேசத்தில் ஐந்து ஆண்டுகளாய் உழைக்கும் தன் கனவனின் வாரம் ஒருமுறை வரும் தொலைபேசி அழைப்பிற்காக!

Comments
:-)