Posts

Mother's Day ... (50th Post)

Image
Amma I love you soo..much. Thanks for being there! You are my greatest friend ever! Dai Chellam Avanish, I love you too for transforming me to a beautiful person called mother! And I am m issing you a lot here!! Happy Mothers day to all the lovely moms out there reading this ...

I Have lots to tell you...

Image
Enamo ponga onum solrathuku illa, vela romba kuduthu namala blog pakkam varavidama panitanga namma thoguthiyila. Athanala than ithana naal abscond.So makalay epdi irukinga? Nalla padiya oru project mudinjathu, adutha project ipo than arambichathu, so inga pidungara aaniya, onsitela la poi pidungunu solitanga, so adutha bus -a pudichu US vanthitain. Motha thadava outside Indiava, so niraiya learnings. Hmm poitay iruku, aana nalla vela ithu vara ethayavathu thappa pesi/purinju embarassinga ethum nadakala! Nadakathunu nambrain..(nambikaingra sakarathula thaan valkai oduthu ilaya).Nalla oor, cityum ilama, gramamagavum ilama, idaipatta stagela oru oorla thanga solli irukanga. Apartment ella vasathiyoda koduthirukanga, samachu, sapada katitu, polapukku vanthiromla! Car onu thanthirukanga, nan thangi irukira oorkulla matum otitu irukain, adutha varam aapisuku otitu vanthiralamnu ninaikirain.. Anga than aani-na ingayum oru dozen aani pidunga koduth...

பசுமை நிறைந்த நினைவுகளே..

Image
இந்த பாட்ட கேட்டதும் (ஃபேர்வல்), அதாங்க பள்ளிக்கூட, கல்லூரி பிரிவு உபச்சார விழாதான் நம்ம ஞாபகத்துக்கு வரும். இப்படி பல பாடல்கள் சில நிகழ்ச்சிக்காகவே நம்ம ஆட்கள் வச்சிருப்பாய்ங்க நம்ம மக்கள். எடுத்துக்காட்டா 'வாராயோ தோழி வாராயோ - கல்யாணம், இளமை இதோ - புத்தாண்டு'..எங்க ஊர்ல இருக்கிற பெண்களுக்கான கல்லூரிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி. நான் பி.எஸ்ஸி படிக்கும்போது,ஒரு செட் சேர்ந்தோம் பாருங்க, சும்மா லெக்சரர் எல்லாம் நடுங்குவாங்க எங்க வகுப்புக்கு வரதுக்கே, அவ்வளவு அடக்கம்! கடைசி பென்ச்! சேட்டை எல்லாம் செய்யரதுக்குன்னே வந்திருக்கீங்களான்னு கேப்பாங்க எல்லாரும். HODயை வாரம் ஒருமுறை சந்திச்சிரனும் எங்களுக்கெல்லாம்! மொத்தம் 10 பேர். இம்சை தாங்காம ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பெஞ்சில உக்கார சொல்வாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.லேடீஸ் காலேஜில படிச்சா நிறைய இம்சை பொண்ணுங்களுக்கு கிடையாது. அம்மா அப்பா ரொம்ப ரிலாக்ஸா இருப்பாங்க - நொய் நொய்னு பசங்க பத்தி அட்வைஸ், வார்னிங் எல்லாம் சொல்ல சந்தர்ப்பம் இருக்காது....

காதலர் தினம்

இந்த உலகம் கொண்ட பொக்கிஷமெல்லாம் உலகின் முதல் பணக்காரர் கொண்ட பணமெல்லாம் எழில் கொஞ்சும் மங்கையரின் அழகெல்லாம் மழலை தரும் மகிழ்ச்சி எல்லாம் அள்ளி என்னிடம் தந்தாலும் அதற்கு மாறாக, அந்த முதல் வார்த்தைகள் நாம் இருவரின் பெயர்களால் நிறைந்த பக்கங்கள் அருகில் நிற்காமல் சேர்ந்தெடுத்த புகைபடங்கள் நாம் பரிமாறிக் கொண்ட சின்ன சின்ன பரிசுகள் பழகிய அந்த அழகான பொழுதுகள் மனதில் தோன்றிய கவிதைகள் நமக்காகவே உலகம் இயங்கிய அந்த நிமிஷங்கள் கடைசியாக நாம் அழுத கண்ணீர் துளிகள் இதில் எதையுமே நான் தரமாட்டேன்.. ஏதோ சொல்கிறார்கள் ஆன்றோர் சான்றோர் துன்பம் என்பது, தன்னுடையது என்று ஒரு பொருளை நாம் எண்ணும் போதுதான் வரும் .. ஈடுபாடு இல்லை எனக்கிந்த கூற்றின்மேல் உன்னை என்னுடையவன் என்று எண்ணியபின்தான் எனக்கு, சந்தோஷம் - இவ்வார்த்தையின் அர்த்தம் விளங்கிற்று.. இப்பொழுது நீ இல்லை, ஆனால் எனக்குள் இன்னும் உன் முகம், அந்த சிரிப்பு, கர்வம் கலந்த அந்த பார்வை நான்கு விரல் கொண்டு நீ அழகாக கோதிவிடும் உன் முடி கவிதை எழுதும் போது உன் முகத்தில் தோன்றும் அந்த சிந்தனை.... சொல்வேன் இன்னும் ஏராளம் உன்னைப் பற்றி ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து...

அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா.... :)

Image
மக்களே, ஜனவரி 17-அன்னைக்கு போஸ்ட் போட்டதுக்கு பின்னால, ஆபீஸ்ல நாம ப்ளாக் எழுதறத மோப்பம் பிடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன், எக்கச்சக்க வேலை கொடுத்துட்டாங்க. இன்னும் இருக்கு பாக்கி! நிறைய பேர் வந்து என்ன ஆச்சு 'எஸ்' ஆயிட்டியான்னு கேட்கனும்னு நினைச்சு கொஞ்சம் டீஸண்டா, எப்போ அடுத்த போஸ்ட்டுன்னு கேட்டாங்க. நன்றி மக்களே, இந்த அன்புக்கு! இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் வ.வ. சங்க மெம்பர் ஆகி 2 போஸ்ட் அங்க போட்டிருந்தேன், அவை இங்கும் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சி, அடித்த ரெண்டு போஸ்டை போடறேன். படிச்சு 2 comment போட்டுட்டு போங்க!!

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

சென்ற முறை மதுரை போனபோது, என் பீரோவின் கடைசி தட்டில் வைத்திருந்த புத்தகங்களை அடுக்கும் யோசனை தோன்றியது.புத்தகங்களை வெளியே எடுத்து, தூசித்தட்டி அடுக்கி வைத்தேன். ஒரு பெரிய புத்தகத்திலிருந்து, ஒரு சின்ன தொலைபேசி டயரி கீழே விழுந்தது. திறந்து பார்த்தால், அது 1997 - 2000 என்னோடு படித்த, பழகிய நண்பர்களின் தொலைபேசி எண்கள்.அப்போது எல்லாம் மதுரை DoT நம்பர்களில் 6 எண்கள்தான் இருக்கும் (605033 போல), இப்போதும் அந்த எண்களை தக்க வைத்திருந்தால், முன்னால் 2 சேர்த்து அழைக்க வேண்டும்,(2605033). எனக்கு நல்ல ஞாபகத்திறன், முக்கால்வாசி பெயருக்குறியவர்களை நினைவுக்கூறமுடிந்தது, முகம் கூட மறக்கவில்லை. என் மகன் தூங்கிக் கொண்டிருந்தார், அதனால் நான் வேலை ஏதுமின்றி தான் இருந்தேன்.அப்போது தான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, "எல்லா நம்பர்களையும் அழைத்து பார்த்தால் என்ன?" என்று. ஒருவேளை நம் நண்பர்கள் தொலைபேசியை எடுக்காவிட்டாலும்,யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று பிறரிடம் கேட்டுக்கூட தெரிந்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன். சிலர் மிகவும் ஆச்சிரியத்தோடு பேசினர்,சிலரின் அம்மா/அப்பாவோடு பேசத்தான் முட...

Living a day at a time

I recently came across this phrase in an article, in a popular magazine. 'Living a day at a time' - this sure does mean a lot! Do we really do live one day at a time? I dont think so, atleast considering the way I live. But, when I gave it a thought, it does signify something BIG. Leave alone the past, it cant be undone, forget about the future, it is not in your hands, but what you have with yourself now, and which is all yours is TODAY. Live it, cherish every part of it, remember its not gonna come your way ever again in this lifetime. You cant buy this day with any amount of money. When talking of taking control of today, we can accomplish what we want, work with all your might, dont think about the result that you may obtain tomorrow, just enjoy the process. Liked this part of it actually - Loving what you do, makes your mind peaceful, gives you a satisfaction nothing else in the world can give when you complete it! If we say we should forget about the past, we actually me...